ஜார்ஜியாவில் மகளிர் சேம்பியன் தொடர் நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை திவ்யா என்பவர் கலந்து கொண்டார். அப்போது இவருக்கும், இந்தியாவை சேர்ந்த கொனேரு ஹம்பி இடையே போட்டி நடைபெற்றது. இதில் இரண்டு சுற்றுகள் டிராவானது. இந்நிலையில் இன்று டைப் பிரேக்கர் சுற்று நடைபெற்றது.
இதில் திவ்யா அனுபவம் வாய்ந்த கோனேரு ஹம்பியை வென்று சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன்மூலம் அவர் FIDE செஸ் உலகக் கோப்பையை வென்ற முதல் இந்திய பெண்மணி என்ற வரலாற்றை படைத்துள்ளார். இவருக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
