தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளை நடமாடும் ஏடிஎம்களாக பார்க்க முடியாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மயக்க மருந்து செலுத்துவதில் சிரித்து தாமதம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் இறந்த சம்பவத்தில் மருத்துவமனை இயக்குனர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தன் மீது உள்ள குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்யக்கோரி மருத்துவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளை ஏடிஎம் மிஷின்கள் ஆகவும் பணம் கறக்கும், கினிப் பன்றிகளாகவும் பார்க்கின்றன பல தனியார் மருத்துவமனைகள் மற்றும் நர்சிங் ஹோம்கள் போதுமான உள் கட்டமைப்பு இல்லாமல் நோயாளிகளை அனுமதிப்பதாகவும் தெரிவித்தனர். மருத்துவர் நோயாளியை அனுமதித்து அறுவை சிகிச்சைக்கு குடும்ப உறுப்பினர்களிடமிருந்து அனுமதி பெற்றதாகவும் ஆனால் மயக்கம் மருந்து இல்லாததால் சரியான நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யவில்லை என்றும் கூறி சட்ட நடவடிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்க அசோக் குமார் ராயின் மனுவை நிராகரித்தது.
