பீகார் மாநிலத்தில் குழந்தை ஒன்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு பாம்பு ஒன்று வந்துள்ளது. இதையடுத்து அந்த குழந்தை அது பொம்மை என்று நினைத்து அந்தப் பாம்பை வாயில் வைத்து கடித்துள்ளது. இதில் அந்த பாம்பு துடிதுடித்து உயிரிழந்தது. இதையடுத்து அந்த குழந்தை வீட்டில் மயங்கி கிடந்ததுள்ளது.
இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தனது குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் குழந்தையின் உடம்பில் விஷம் ஏறவில்லை என்றும் குழந்தை நலமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
