தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியில் புகையிலை, குட்கா போன்ற போதைப்பொருட்கள் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ஆறுமுகநேரி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜதுரை என்பவர் அங்கு மளிகை கடை நடத்தி வருகிறார். அவரது கடையை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது.
எனவே போலீசார் ராஜதுரையை கைது செய்தனர். பின்பு அவரிடம் இருந்து சுமார் 8 கிலோ எடையுடைய புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ராஜதுரை மீது வழக்குபதிவு செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
