திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல் பகுதியில் ஜெபஸ்டின் ராஜ் (31) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக ஒரு இளம் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்தப் பெண்ணுக்கு 16 வயதில் ஒரு தங்கை இருக்கிறார். இந்நிலையில் ஜெபஸ்டின் ராஜ் தன்னுடைய மனைவியின் வீட்டில் திருமணமாகி நான்கு மாதங்கள் தங்கி இருந்த நிலையில் அந்த வீடு மிகவும் சிறிய வீடு என்பதால் குடும்பத்தினர் அனைவரும் ஒரே அறையில் தூங்கியுள்ளனர்.
இரவு நேரத்தில் அனைவரும் தூங்கிய பிறகு 16 வயது சிறுமியின் வாயை பொத்தி ஜெபஸ்டின் ராஜ் உடலுறவு கொண்டுள்ளார். இது பற்றி வெளியே சொல்ல கூடாது மீறினால் கொலை செய்து விடுவேன் என அவர் மிரட்டிய நிலையில் சிறுமியும் வயதில் யாரிடமும் விஷயத்தை சொல்லவில்லை.
இந்நிலையில் தற்போது சிறுமி இரண்டு மாத கர்ப்பமாக இருக்கிறார். இந்த விவகாரம் குடும்பத்தினருக்கு தெரிய வரவே சிறுமியின் தாய் உடனடியாக ஜெபஸ்டின் ராஜ் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க அவர்கள் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
