ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புஞ்சைபுளியம்பட்டி உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த ஒரு 17 வயது சிறுமிக்கு கடந்த 15ஆம் தேதி சக்திவேல் என்ற 31 வயது வாலிபருடன் திருமணம் நடைபெற்றது. இந்த சிறுமி எட்டாம் வகுப்பு முடித்த நிலையில் அதன் பிறகு பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் சிறுமிக்கு 31 வயது வாலிபருடன் கடந்த 15 ஆம் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில் கடந்த 16ஆம் தேதி சிறுமி தனக்கு வயிறு வலிப்பதாக தன் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து சிறுமியை அவரது தாய் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் கடந்த 17ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதாவது அந்த சிறுமிக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதன் காரணமாக உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் இது தொடர்பாக போலீஸார் சக்தி வேலை கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது சிறுமி ஏற்கனவே 3 மாத கர்ப்பிணி ஆக இருந்ததாகவும் அந்த கருவை கலைக்க மாத்திரைகள் வாங்கி கொடுத்ததாகவும் சிசுவை அந்த பகுதியில் புதைத்ததாகவும் அவர் கூறிய நிலையில் தற்போது புதைக்கப்பட்ட சிசுவை தோண்டி எடுத்து போலீசார் ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
அதே நேரத்தில் சிறுமி கர்ப்பம் ஆனது எப்படி கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கிக் கொடுத்தது யார் போன்றவைகள் குறித்து விசாரணை நடைபெறுகிறது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சக்திவேல் மீது குழந்தை திருமண சட்டம் மற்றும் போக்ஸோ ஆகிய வழக்குகள் பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
