இன்றைய காலகட்டங்களில் சிலர் முக்கியமான இடங்களில் கவனிக்க வேண்டியவற்றை கவனிக்காமல் செல்லிலேயே மூழ்கிக் கிடப்பது அதிகரித்து வருகிறது.
அதனால் ஏற்படும் இழப்புகளை அவர்கள் நினைப்பதில்லை. அதேபோன்று சமீபத்தில் ரயில் நிலையத்தில் 66வயதுடைய முதியவர் ஒருவர் அமர்ந்து தனது செல்போனில் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்தார்.
People who are Addicted to #SocialMedia on #MobilePhones 📱, be Alert ⚠️ while Traveling in Train
A #LifeSavingAct by #RPF Constable Satya Prakash Rajurkar at #Betul railway station, rescued a 66-year-old man who slipped while trying to board the moving train. Brave effort that… pic.twitter.com/uAUh7NyoZH
— Surya Reddy (@jsuryareddy) July 21, 2025
அப்போது அவர் செல்ல வேண்டிய ரயில் பிளாட்பார்மிர்ருக்கு வந்ததை கூட கவனிக்காமல் செல்போனிலேயே மூழ்கிக் கிடந்துள்ளார். பின்னர் ரயில் கிளம்பியதை கூட கவனிக்காமல் இருந்த அவர், திடீரென எழுந்து ரயிலை கவனித்ததும் ஓடிச்சென்று அதில் ஏற முயற்சித்தார்.
அப்போது கால் இடறி கீழே விழுந்தார். உடனே அருகில் நின்ற ஆர்பிஎப் பாதுகாப்பு வீரர் சத்ய பிரகாஷ் ராஜூக்கர் அந்த முதியவரை வேகமாக பிடித்து இழுத்ததால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரும் தங்களது விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
