கேரளா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி எஸ் அச்சுதானந்தன் (102) கடந்த மாதம் நெஞ்சுவலி காரணமாக திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்க அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது, இந்நிலையில் அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக கிடப்பதாக தகவல்கள் வெளியானது.

இதை அடுத்து மருத்துவமனையில் உள்ள அவரது உடல்நலம் குறித்து விசாரிக்க முதலமைச்சர் பினராயி விஜயன் மருத்துவமனைக்குச் சென்று விசாரித்தார். இந்நிலையில் அவர் தற்போது சிகிச்சை பலனின்றி காலமானார். இவர் கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை கேரளா முதலமைச்சராக இருந்தது குறிப்பிடத்தக்கது.