கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கார் டயர் வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. சாலையில் செல்லும்போது திடீரென கார் டயர் வெடித்ததால் நிலைத்தடுமாறி ஒரு பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்தில் உயிர் இழந்த நிலையில் ஆயுதப்படை காவலர் உட்பட 5 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.