இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது அந்த வீடியோவில் தந்தை ஒருவர் தனது மூத்த மகனை கண்டித்து கொண்டிருக்கிறார். அப்போது அந்த சிறுவன் அழுது கொண்டிருக்கிறார். இதை பார்த்த அவரது தம்பி அங்கிருந்து வந்து 2 சேர்களை கொடுத்து இருவரையும் அமர சொல்கிறார். அதன் பின்பு அந்த குழந்தையை மீண்டும் வந்து தனது அண்ணனுக்கு தண்ணீர் கொடுக்கிறது.

 

அதன் பின்பு தனது அந்த அண்ணனுக்கு ஸ்நாக்ஸ் எடுத்து வந்து கொடுக்கிறது. இதையடுத்து தனது தந்தை கையில் வைத்திருந்த பொருளை தட்டி விட்டு கட்டி அணைக்கிறது. அதன் பின் தனது அண்ணனை அங்கிருந்து அழைத்துச் செல்கிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.