இஸ்ரேல் கடந்த ஜூலை 16ஆம் தேதி சிரியா தலைநகர் டமாஸ்கஸில் திடீரென வான்வழி தாக்குதல் நடத்தியது. இது மிக முக்கியமான ராணுவ கட்டிடங்கள், பாதுகாப்பு துறை மையம் மற்றும் அரசியல் தலைமைகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என 300-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், தெற்கு பகுதியில் குவிக்கப்பட்டிருந்த படைகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதல் சிரியாவில் உள்ள ட்ரூஸ் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கையாக இஸ்ரேல் கூறியுள்ளது. அதாவது ட்ரூஸ் மக்கள் மீதான அரசு படைகளின் தாக்குதலுக்கு எச்சரிக்கை வழங்குவது என்றும், இனப்படுகொலைக்கு வழிவழியாக இருப்பதை தடுக்க வேண்டும் என்றும், சிரியாவின் தெற்கு பகுதியில் இருக்கும் அரசின் படைகள் வாபஸ் பெறப்பட வேண்டும் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் சிரியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளதாக அமெரிக்க தூதர் டாம் பாரக் கூறியுள்ளார். ஜோர்தான், துருக்கி மற்றும் அண்டை நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக கனடாவில் உள்ள சிறிய தூதரகம் மற்றும் அமெரிக்காவில் உள்ள இஸ்ரேல் தூக்கரகம் எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
