தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் ஏசுராஜ் (54). இவர் கடந்த 2020 ஆம் ஆண்டில் அதே கிராமத்தைச் சேர்ந்த 6 சிறுமிகளிடம் தகாத முறையில் பாலியல் செய்கை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் இயேசுராஜ் கைது செய்யப்பட்டார். இது குறித்த வழக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் அந்த வழக்கு நீதிபதி பிரீத்தா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை முழுமையாக விசாரித்த நீதிபதி ஏசுராஜ் மீது உள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் மற்றும் ரூபாய் 12000 அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.

இதனை அடுத்து இவ்வழக்கு குறித்த புலனாய்வு விசாரணையை திறம்பட செய்த அப்போதைய கழுகுமலை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கஸ்தூரி, நீதிமன்றத்தில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலட்சுமி, விசாரணை முழுவதும் உதவியாக இருந்த ஏட்டு சேது ராஜன் ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.