ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூர் வெட்டுக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகோபால். இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி சேர்ந்த ஜெர்மன்(36) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 14 வயதில் மகளும் 10 வயதில் மகளும் உள்ளனர்.
தற்போது விஜயகோபால் உத்தரகாண்டில் எல்லை பாதுகாப்பு துணை ராணுவத்தில் வேலை பார்த்து வருவதாக தெரிகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.
நேற்று முன்தினம் ஜெர்மின் இரவு நேரம் தனது மகன், மகளுடன் சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த இரண்டு மர்ம நபர்கள் குழந்தைகள் கண்முன்னையை ஜெர்மினை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜெர்மினின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது ஜெர்மின் பிற ஆண் நண்பர்களுடன் செல்போனில் அதிக நேரமாக பேசியது தெரியவந்துள்ளது.
ஜெர்மினின் பெற்றோர் விஜயகோபால் தான் ஆள் வைத்து தங்களது மகளை கொலை செய்ய வாய்ப்பு இருக்கிறது என கூறியுள்ளனர். எனவே தகாத உறவு விவகாரத்தில் கொலை நடந்ததா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
