விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் அடுத்த பட்டணம் கிராமத்தில் வசித்து வருபவர் அண்ணாமலை. அவருக்கு பிரவீன் குமார்(25) என்ற மகன் உள்ளார்.
பிரவீன் குமார் திண்டிவனம் பகுதியில் டாட்டூ கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணுடன் பிரவீன் குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனை அடுத்து இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதால் அந்த இளம்பெண் பிரவீன் குமாரிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.
அதனால் ஆத்திரமடைந்த பிரவீன் செல்போன் மூலமாகவும் ,நேரில் சென்று அந்தப் பெண்ணை தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார். பின்னர் அந்தப் பெண்ணை நேரில் சென்று திட்டியதுடன், அடித்து தாக்கியுள்ளார்.
தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என மிரட்டியும் உள்ளார். அதனால் பயந்து போன அந்தப் பெண் திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பிரவீன் குமாரை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
