கர்நாடக மாநிலத்தில் உள்ள பௌலகவி என்னும் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் காங்கிரஸ் கட்சியின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கர்நாடக முதல்வர் சித்திராமையா கலந்து கொண்டு பேசினார்.அவர் மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போது, உதவி காவல் கண்காணிப்பாளர் நாராயண் பரமணியை அடிக்க கை ஓங்கியதாக புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வரும நிலையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனால்  மனவருத்தத்தில் இருந்த நாராயண் விருப்ப ஓய்வு வேண்டி கோரிக்கை எழுதினார். இதைத்தொடர்ந்து முதல்வர் சித்தராமையா மற்றும் பிற அதிகாரிகள் அவருடன்  பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் அவருடைய முடிவு மாற்றப்பட்டது. இந்நிலையில் அவர் பௌலகாவி நகர துணை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் நாராயண் காவல்துறையில் 31 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் நிலையில், அவர் ஓய்வு பெறுவதற்கு இன்னும் 4 ஆண்டுகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.