உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஹசிம் கான்(29) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் ராஜஸ்தானை சேர்ந்த பவன் குமாவத்(21) என்ற பெண்ணும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதர் பின்னர் இருவரும் தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத்தில் உள்ள பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இதற்கிடையில் இவர்கள் கடந்த சில நாட்களாக நிதி நெருக்கடியில் அவதிப்பட்டு வந்ததாகவும், இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும் தங்கள் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.