பயணிகளின் வசதிக்காக தெற்கு ரெயில்வே புதிய மாற்றங்களை எடுத்து வருகிறது. குறிப்பாக வந்தே பாரத் ரெயில்களில் புறப்படுவதற்கான கடைசி 15 நிமிடங்களில் முன்பதிவு செய்யும் வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், காலியிடங்கள் இருப்பதற்கேற்ப பயணிகள் நேரடியாகவும், கடைசிநிமிடத்திலும் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.

இந்த புதிய வசதி தற்போதைக்கு 8 வந்தே பாரத் ரெயில்களில் மட்டுமே அமலுக்கு வருகிறது. அவை:

மங்களூரு சென்ட்ரல் – திருவனந்தபுரம் சென்ட்ரல் (20631)

திருவனந்தபுரம் சென்ட்ரல் – மங்களூரு சென்ட்ரல் (20632)

சென்னை எழும்பூர் – நாகர்கோவில் (20627)

நாகர்கோவில் – சென்னை எழும்பூர் (20628)

கோயம்புத்தூர் – பெங்களூரு கண்டோன்மென்ட் (20642)

மங்களூரு சென்ட்ரல் – மட்காவ் (20646)

மதுரை – பெங்களூரு கண்டோன்மென்ட் (20671)

சென்னை சென்ட்ரல் – விஜயவாடா (20677) ஆகிய ரெயில்களில் புதிய வசதி அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம், பயணிகள் எளிதாகவும் வசதியாகவும் கடைசி நேர முன்பதிவை செய்து பயணிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.