தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி பதவி இழந்தார். இவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் உமா மகேஸ்வரி தோல்வி அடைந்தார். மறைமுக வாக்கெடுப்பில் உமா மகேஸ்வரிக்கு எதிராக 28 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.

நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது கடந்த 2ஆம் தேதி நடந்த குரல் வாக்கெடுப்பிலும் உமா மகேஸ்வரி தோல்வி அடைந்தார். பின்னர் உமா மகேஸ்வரி உயர் நீதிமன்றத்தை நாடிய நிலையில் நேற்று  பலத்த பாதுகாப்புடன் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பிலும் உமா மகேஸ்வரி தோல்வி அடைந்து பதவியை இழந்துள்ளார்.

இந்த நிலையில் வாக்கெடுப்பில் உமா மகேஸ்வரி பதவி இழந்த நிலையில் வாக்கெடுப்பை தடுத்ததாக அவர் மீது நகராட்சி நிர்வாகம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.