மக்களைக் காப்போம், தமிழகத்தின் மீட்போம் என்ற தலைப்பில் கடலூர் மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது திமுக கூட்டணியில் சீட்டுகளை குறைத்து விடுவார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்தார்.
மேலும் அதிமுகவுக்கு வரும் கட்சிகளை ரத்தின கம்பளம் விரித்து வரவேற்போம் என்று தெரிவித்தார். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி அழைப்புக்கு விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் கூறியதாவது திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வலிமையாக உள்ளது. நாங்கள் இந்த கூட்டணியில் தான் தொடர்வோம். அதிமுக ஆட்சி காலத்தில் கொடியேற்ற அனுமதி மறுக்கப்பட்டது என்று கூறினார்.
