ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள எமனேசுவரத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் அருள்ராஜ் என்ற ஆசிரியர் பணியாற்றி வருகிறார். இவர் வகுப்பறையில் மாணவிகளிடம் பாலியல் தொடர்பாக ஆபாசமாக பேசிவந்ததாக புகார் எழுந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்த மாணவிகளின் பெற்றோர், நேரில் பள்ளி தலைமை ஆசிரியர் தர்மராஜிடம் சென்று புகார் அளித்தனர். அதனை தொடர்ந்து, பள்ளி தலைமை ஆசிரியர் பரமக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் எழுத்துப்பூர்வ புகார் பதிவு செய்தார்.

புகாரின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் ராதா தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது மாணவிகள் வழங்கிய சாட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, அருள்ராஜ் மீது குழந்தைகள் பாதுகாப்பு சட்டமான போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கல்வித் துறையிலும், பெற்றோர் சமுதாயத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.