இந்திய மக்களின் தனிநபர் அடையாள அட்டை மிகவும் முக்கிய ஆவணமாக இருப்பது ஆதார் அட்டை. இதன் மூலம் வங்கிகளில் லோன் பெறுவது போன்ற அனைத்து முக்கியமான விஷயங்களுக்கும் ஆதார் கார்டு தற்போது முக்கியமாக உள்ளது. இந்நிலையில் 5 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு பெயர் பிறந்த தேதி பாலினம் முகவரி கொண்டு ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. அதைப்போன்று 7 வயதை தாண்டிய குழந்தைகளுக்கு ஆதார் உடன் கருவிழி, கைரேகை பதிவுகளை இணைக்க வேண்டும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
குழந்தைகளின் 5 முதல் 7 வரையிலான காலத்தில் ஆதார் புதுப்பிப்பை பெற்றோர்கள் மேற்கொள்ள வேண்டும். கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் ஆதாரை புதுப்பித்து விட்டால் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை. ஏழு வயதை கடந்த பிறகு ரூபாய் 100 கட்டணத்தை செலுத்தி புதுப்பித்துக் கொள்ளலாம். குழந்தைகள் ஏழு வயதை தாண்டிய பிறகும் ஆதார் விபரங்களை புதுப்பிக்கவில்லை என்றால் அவர்களின் ஆதார் கார்டு முடக்கப்பட அதிக வாய்ப்புள்ளது என்று யூ ஐ டி ஏ ஐ தெரிவித்துள்ளது.
