நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தொடர்ந்து சர்ச்சையில் சிக்குகிறார். அண்மையில், திருபுவனத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது, ஒரு பெண் தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக பேசும்போது, “தங்க வரதட்சனை, பாலியல் துன்புறுத்தலால் ஒரு பெண் தற்கொலை செய்திருக்கிறார், அதைப்பற்றி மாதர் சங்கங்கள் எதுவும் பேசவில்லையே?

உங்களுக்குத் தேவையென்றால் பேசுறீங்க, போதை, மது அருந்தி விட்டு படுத்துவிட்டீர்களா…? என கடுமையாக விமர்சித்தார். எனக்கு எதிராக மட்டும் மண்டியிட்டு மனு கொடுத்தாங்க. இவரது பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி, பெண்கள் உரிமை அமைப்புகள், எழுத்தாளர்கள் மற்றும் பெண்ணியவாதிகளிடையே பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

பெண்கள் அமைப்புகளை பகைத்துரைக்கும் வகையில் பேசியுள்ள சீமான், “எதிர்க்க வேண்டும் என்றால் முதலாவதாக மாதர் சங்கமே வரும், இப்போது எங்கே சென்றது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளதோடு, “மனித உரிமை ஆர்வலர்கள், பெண்ணியவாதிகள் எல்லாம் இப்போது மௌனமாக இருக்கிறீர்களே ஏன்?” என்றும் திட்டவட்டமாக கேட்டுள்ளார்.

இதற்கிடையே, சில பெண் அமைப்புகள் சீமான் மீது மன்னிப்பு கோரும் வகையில் அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றன. தொடர்ச்சியாக சர்ச்சை பேச்சுகளால் வலுப்பெறும் சீமானின் இந்த புதிய விமர்சனம், அவரின் அரசியல் செல்வாக்குக்கும் எதிர்வினையாக அமைந்திருக்கிறது.