அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் தொடங்கியுள்ளார். இன்றைய தினம் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது, அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றுதான் அமித்ஷா கூறினார்.
கூட்டணி ஆட்சி என அவர் கூறவில்லை. நீங்கள் தவறாக புரிந்து கொண்டால் நான் பொறுப்பேற்க முடியாது. நான் ஏற்கனவே தெளிவாக கூறிவிட்டேன். தனி பெரும்பான்மையுடன் அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும். கூட்டணிக்கு நாங்கள் தான் தலைமை.
கூட்டணியில் நான் எடுப்பது தான் இறுதியான முடிவு எனக் கூறியுள்ளார். மேலும் டிடிவி தினகரன் பற்றிய கேள்விக்கு நாங்கள் பாஜகவில் இருக்கிறோம். எங்கள் கூட்டணிக்கு மேலும் பல கட்சிகள் வந்து சேரும் எனக் கூறியுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் குறித்து கேட்டபோது அது முடிந்து போன பிரச்சினை என கூறியுள்ளார்.
