கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இளையபெருமாள் நூற்றாண்டு அரங்கம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு க ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன் கூறியதாவது, தமிழகத்தில் திராவிட மாடல் என்று சொல்லக்கூடிய திமுக அரசு மறுபடியும் வளரக்கூடிய அணியாக அமையும் விசிக உற்ற துணையாக இருக்கும்.

திமுகவிற்கு விழும் 4 ஓட்டுகளில் ஒரு1 ஓட்டு விசிக ஓட்டாக இருக்கும், 100 ஓட்டுகளில் 25 ஓட்டுக்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஓட்டாக இருக்கும். ஒரு ஓட்டு கூட சிந்தாமல் சிதறாமல் திமுக தலைமையிலான கூட்டணிக்கு கொத்துக் கொத்தாக விழும் என்ற அளவிற்கு பணியாற்றுவோம். கைகோர்த்து நிற்கிறோம் களத்தில் நிற்கிறோம் என்பதற்கு இதுதான் காரணம்.

தமிழகத்தில் முதலமைச்சர் மிகச்சிறந்த ஆட்சியை நடத்தி வருகிறார். தாய் 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்று கூறுவார்கள். கருணாநிதியை விட முதலமைச்சர் இன்றைக்கு தோழமைக் கட்சிகளை எல்லாம் வெற்றிகரமாக ஒன்றிணைத்து வழி நடத்துகிறார். கருணாநிதியை விட என்று சொன்னால் அவரை குறைத்து மதிப்பிடுவது கிடையாது.

பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி ஆட்சி நடத்தும் முதலமைச்சருக்கு என்றும் நாம் உற்று துணையாக இருப்போம். மீண்டும் திமுக ஆட்சியை தமிழகத்தில் இடம்பெறும் தொலைநோக்குப் பார்வை கொண்ட முதலமைச்சருக்கு நாம் உற்ற துணையாக இருப்போம். வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஓரணியில் தமிழகம் அதுதான் திமுக அணியில் தமிழகம் மற்றவர்கள் எல்லாம் கட்சிகளாக இருப்பார்கள் என்று தெரிவித்தார்.