மயிலாடுதுறையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 8 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் பிறகு அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசியதாவது, விமர்சனம் என்ற பெயரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர் ஒருவரே போதும். இந்த திட்டத்தில் என்னென்ன சேவைகள் இருக்கு. என்னென்ன செய்யப் போகிறோம் என்பதை கூறியிருக்கிறார். இந்த திட்டத்தை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எடப்பாடி பழனிச்சாமி எனக்கு டாட்டா பை பை சொல்கிறார். பத்து தோல்வி பழனிச்சாமி அவர்களே…

கடந்த 10 தேர்தல்களில் மக்கள் உங்களுக்கு தான் பை பை சொன்னார்கள். வரும் தேர்தலில் உங்களுக்கு நிரந்தரமாக குட்பை சொல்ல போகிறார்கள். உங்கள் குடும்பத்தை ரெய்டில் காப்பாற்றிக் கொள்வதற்கு டெல்லி சென்று அதிமுகவை அடமானம் வைத்திருக்கிறீர்கள். டெல்லியில் சிக்கி தவிக்கும் உங்களை நம்பி மக்கள் ஏமாற தயாராக இல்லை என எடப்பாடி பழனிச்சாமியை விமர்சனம் செய்துள்ளார்.