அகில இந்திய மாதர் சங்கத்தின் மாநில தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் இன்று சென்னையில் உள்ள காவல்துறை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தனர். அந்த புகாரில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது.
அதாவது திருப்பூரில் வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்துக்கொண்ட ரிதன்யா குறித்து பேசும் போது பெண்கள் அமைப்புகள், முற்போக்கு அமைப்புகள், மாதர் சங்கங்கள் இந்த பிரச்சனைக்கு குரல் கொடுக்காமல் எங்கு போய் படுத்து கிடக்கிறார்கள்? கஞ்சா கொக்கைன் சாப்பிட்டு கிடக்கிறார்களா? அல்லது டாஸ்மாக்கில் குடித்துவிட்டு கிடைக்கிறார்களா? என்று அவதூறாக பேசியுள்ளார். எனவே சீமான் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
