மயிலாடுதுறையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 8 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் பிறகு அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசியதாவது, விமர்சனம் என்ற பெயரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் ஒருவரே போதும். இந்த திட்டத்தில் என்னென்ன சேவைகள் இருக்கு. என்னென்ன செய்யப் போகிறோம் என்பதை கூறியிருக்கிறார். இந்த திட்டத்தை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எடப்பாடி பழனிச்சாமி எனக்கு டாட்டா பை பை சொல்கிறார். பத்து தோல்வி பழனிச்சாமி அவர்களே…
கடந்த 10 தேர்தல்களில் மக்கள் உங்களுக்கு தான் பை பை சொன்னார்கள். வரும் தேர்தலில் உங்களுக்கு நிரந்தரமாக குட்பை சொல்ல போகிறார்கள். விரக்தியில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் தமிழக மக்கள் மீது குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறீர்கள்.
ஆயிரம் ரூபாய்க்கு ஏமாந்து விட்டீர்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி பேசுகிறார். நீங்கள் தான் பாஜகவை நம்பி ஏமாந்து போய் இருக்கிறீர்கள். ஒரு காமெடி திரைப்படத்தில் வரும். அதற்கு எல்லாம் நீ சரிப்பட்டு வர மாட்டாய். அந்த மாதிரி அவர்கள் முடிவுக்கு வந்து விட்டார்கள்.
இதை தெரிந்து கொண்டு போலியாக ஒரு பிம்பத்தை உருவாக்க முயற்சி செய்கின்றனர். சுந்தரா ட்ராவல்ஸ் என்று ஒரு படம் இருக்கிறது. அந்த படத்தில் வருவது போல பஸ்ஸை எடுத்துக்கொண்டு எடப்பாடி பழனிச்சாமி கிளம்பிவிட்டார்.
அந்த பஸ்ஸிலிருந்து புகை வருவது போல அவர் வாயிலிருந்து பொய்யும் அவதூறுகளும் வந்து கொண்டே இருக்கிறது. பாஜக கட்ச தீவை மீட்க நடவடிக்கை எடுத்ததா? கட்ச தீவை தாரை வார்த்த விவகாரத்தில் பாஜக அரசு அரசியல் செய்கிறது என கூறியுள்ளார்.
