தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற நிலையில் சுமார் 8 லட்சம் பேர் அந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 25ஆம் தேதி இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெற இருப்பதாக நடிகர் விஜய் அறிவித்துள்ளார். இதற்கான பந்தல்கால் நடும் விழா இன்று மதுரையில் நடைபெற்றது.
இந்நிலையில் நடிகர் விஜய் மறைந்த நடிகர் விஜயகாந்தின் பிறந்தநாள் ஆன ஆகஸ்ட் 25ஆம் தேதி மதுரையில் மாநாடு நடந்த திட்டமிட்டுள்ளது தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. அதாவது நடிகர் விஜயகாந்த் தேமுதிக என்று அரசியல் கட்சியினை தொடங்கிய பிறகு முதல் மாநாட்டினை மதுரையில் நடத்தினார்.
அப்போது சுமார் 150 ஏக்கர் நிலப்பரப்பில் 2.5 லட்சம் பேர் உட்காரும் வகையில் சேர் போடப்பட்டிருந்தது. ஆனால் அந்த மாநாட்டில் கிட்டத்தட்ட 25 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இது ஒரு உலக சாதனையாகவே பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நடிகர் விஜயகாந்தின் பிறந்தநாள் அன்று நடிகர் விஜய் மாநாட்டினை நடத்த திட்டமிட்டுள்ளது தற்போது ரசிகர்கள் மத்தியிலும் தமிழக வெற்றி கழகத்தினர் மத்தியிலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியல் களத்தில் மதுரை செண்டிமெண்ட் என்பது எம்ஜிஆர் காலத்தில் இருந்தே காலம் தொட்டு வருகிறது. புதிதாக அரசியலில் தடம் பதிப்பவர்களுக்கு மதுரை செண்டிமெண்ட் ஒரு ராசி என்றே கூறப்படுகிறது. மேலும் இந்த ராசி நடிகர் விஜய்க்கும் எந்த அளவுக்கு கை கொடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
