தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் மந்த்ரா. இவர் லவ்டுடே, பெரிய இடத்து மாப்பிள்ளை, கங்கா கௌரி, ரெட்டை ஜடை வயசு போன்ற படங்களில் நடித்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு படங்கள் நடிப்பதை தவிர்த்த இவர் சிறிய இடைவிளைக்குப் பிறகு ராஜா என்ற படத்தில் அஜித்துடன் வாடியம்மா வாடி என்ற பாடலுக்கு நடனமாடி உள்ளார். கடைசியாக கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அதேபோன்று தெலுங்கில் சில படங்களிலும் நடித்துள்ளார். இதற்கிடையில் மவுலி எம். இராதாகிருஷ்ணன் தயாரித்து நவீன டி.கோபால் இயக்கிய உசுரே என்ற படத்திலும் அவர் நடித்துள்ளார். 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிப்பது குறித்து மந்த்ரா கூறியிருப்பதாவது, தமிழ் சினிமாவை விட்டு நான் எங்கும் போகவில்லை. இடையில் லேசான இடைவெளி விழுந்து விட்டது.
நல்ல கதாபாத்திரத்திற்காக காத்திருந்தேன். அந்த வகையில் உசுரே படத்தில் நடித்துள்ளேன். நிறைய பேர் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஒருநாள் ஷூட்டிங் இருந்தாலும் பரவாயில்லை அந்த கதாபாத்திரம் வலிமையுள்ளதாக இருக்க வேண்டும். அப்படித்தான் இந்த படம் எனக்கு பிடித்தது என்று தெரிவித்துள்ளார்.
