தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவர் திரை உலகில் மட்டுமின்றி கார் ரேசிலும் ஈடுபட்டு வருகிறார். பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெறும் கார் ரேஸில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். இந்த ஆண்டு விடாமுயற்சி, குட் பேட் அக்லி என 2 திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் அஜித்குமார் படப்பிடிப்புகளில் இருந்து விலகி கார் ரேசிங் மற்றும் பைக் ரைடிங்கில் கவனம் செலுத்துகிறார்.

 

கடந்த ஜூன் 7ம் தேதி அஜித் ரோமேனியா, பல்கேரியா நாடுகளில் பைக் ரைட் செய்வதாக அவரது வீனஸ் மோட்டார் சைக்கிள் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது நடிகர் அஜித்குமார் ஒரு பூனையை கொஞ்சும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அஜித்குமார் பூனையை மடியில் வைத்துக் கொண்டு நீ இந்தியா வருகிறாயா? சென்னை வருகிறாயா? நான் உன்னை சென்னையில் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறேன் என்று கேட்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.