அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தன்னைத் தொடர்ந்து விமர்சித்து வந்த முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். கடந்த திமுக ஆட்சிக்காலத்தில், ’10 சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வி கண்ட பழனிசாமி’ என்று தன்னை ஸ்டாலின் அடிக்கடி மேடைகளில் எள்ளி நகையாடிப் பேசியதை எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார்.
ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது தலைகால் புரியாமல் பேசக்கூடாது என்றும், ஜாக்கிரதையாகப் பேச வேண்டும் என்றும் தான் அப்போதே நினைத்ததாகக் கூறிய அவர், இன்று தன்னை விமர்சித்த ஸ்டாலினே தேர்தலில் தோற்றுப் போய்விட்டதாக அதிரடியாகப் பேசினார். மேலும், ஆட்சி அதிகாரம் வரும்போது மனிதனுக்குப் பணிவு வரவேண்டும் என்று குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, தற்போதைய தவெக தலைவருக்கும், தவெக நிர்வாகிகளுக்கும் “நீங்களும் இதைப் பார்த்துப் புரிந்துகொண்டு அடக்கி வாசியுங்கள், இல்லை என்றால் உங்களுக்கும் இந்த நிலைமைதான் வரும்” என்று ஓப்பனாகவே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
"10 தோல்வி கண்ட பழனிசாமினு சொன்னார்
அவரே தோற்றுப்போய் விட்டார்” – எடப்பாடியில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேச்சு#EPS | #ADMK | #MKStalin | #Puthiyathalaimuraitv pic.twitter.com/zmooscFSPF— PttvOnlinenews (@PttvNewsX) June 6, 2026
தன்னை ஒழிக்க நினைத்தவர்களின் தப்புப் பிரசாரங்களை எல்லாம் உடைத்து, எடப்பாடி தொகுதி மக்கள் தன்னை 98,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து, தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற எம்.எல்.ஏ என்ற மாபெரும் பெருமையைத் தேடித்தந்திருப்பதாக நெகிழ்ச்சியுடன் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
