இங்கிலாந்து நாடு லண்டனில் சவுத் எண்ட் விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து நெதர்லாந்து செல்வதற்காக சிறிய விமான ஒன்று நேற்று 4 மணிக்கு புறப்பட்டது. இந்நிலையில் விமானம் புறப்பட்டு சில நொடிகளில் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானம் தீப்பற்றி எரிந்த நிலையில் வெடித்து சிதறியதால் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அவர்கள் விமானத்தில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விமானம் விபத்தில் சிக்கியதை தொடர்ந்து விமான நிலையத்தில் சிறிது நேரம் விமான சேவை நிறுத்தப்பட்டது. மேலும் விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.