பொதுவாக விலங்குகள் வெகுளித்தனமாக செய்யும் சில வேடிக்கையான செயல்கள் அனைவரையும் ரசிக்க வைக்கும். அவற்றின் விளையாட்டுத்தனமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் சமீப காலங்களாக வைரலாகி வருகிறது.

அதேபோன்று சமீபத்தில் குரங்கு ஒன்று வேடிக்கையாக செய்த செயல் அனைவரையும் ஈர்த்துள்ளது. அந்த வீடியோவில், குரங்கு ஒன்று மின்சார கம்பிகள் இடையே அமர்ந்து விளையாட்டாக ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிறது.

இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரும் நகைச்சுவையான கருத்துக்களை வெளியிட்டாலும், சிலர் மின்சார கம்பிகள் குறித்த ஆபத்தை உணராமல் விலங்குகள் செய்யும் வேடிக்கை செயல்களை பார்த்துக் கொண்டிருப்பது குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அந்த வீடியோ பார்ப்பதற்கு வேடிக்கைத்தனமாக இருந்தாலும் மின்சார கம்பிகளில் இதுபோன்று விளையாட்டுத்தனமாக செய்வது ஆபத்து விளைவிக்கக் கூடியது என்பதை எடுத்துக்காட்டி உள்ளது.

மேலும் இதுபோன்று விலங்குகள் விளையாட்டுத்தனமான செயல்களில் ஈடுபடும் போது அதனை கவனிப்போர் அங்கிருந்து அதனை விரட்டி விட வேண்டும். இல்லை எனில் பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படும் என பலரும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.