அசாம் மாநிலம் கோபல்பாரா மாவட்டத்தில் பைக்கான் வனப்பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் பாஜக தலைமையிலான மாநில அரசு வனப்பகுதிலுள்ள பொது மக்களின் வீடுகளை இடித்து அவர்களை வெளியேற்றும்  நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக கடந்த சனிக்கிழமை 36 புல்டோசர்கள், 1000 காவலர்கள் உதவியுடன் வனத்துறையினர் வீடுகளை தரைமட்டம் ஆக்கினர். இதனால் அப்பகுதியில் வசித்து வந்த 3300 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்கள் வாழ்விடங்கள் இடிக்கப்பட்ட நிலையில் தற்போது வசிப்பதற்கு கூட இடமில்லாமல் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, யானைகளின் நடமாட்டத்தால் வரும் பாதிப்புகளை குறைப்பதற்காக உயர்நீதிமன்ற உத்தரவின் படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். ஆனால் சிலர் முஸ்லிம்களின் குடியிருப்புகளை தரைமட்டமாக்கும் நோக்கத்தில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமர்சனம் தெரிவித்து வருகிறார்கள். மேலும் மாநில அரசின் இந்த நடவடிக்கையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.