தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர். அந்த வகையில் கரூர் மற்றும் கோவை மாவட்டத்தில் முகாமிட்டுள்ள செந்தில் பாலாஜி பல்வேறு கட்சி நிர்வாகிகளை திமுகவில் இணைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். சமீப காலமாக செந்தில் பாலாஜி முன்னிலையில் அதிமுக, பாஜக, அமமுக மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என பல்வேறு கட்சி நிர்வாகிகள் திமுகவில் இணைந்த நிலையில் தற்போது செந்தில் பாலாஜிக்கு போட்டியாக கரூரில் அதிமுக முன்னாள் அமைச்சர்‌ எம்.ஆர் விஜயபாஸ்கர் முகாமிட்டுள்ளார்.

தற்போது விஜயபாஸ்கர் முன்னிலையில் திமுக கட்சியின் நிர்வாகி ராஜேந்திரன் அந்த கட்சியில் இருந்து விலகிய அதிமுகவில் இணைந்துள்ளார். திமுக நிர்வாகி தன்னுடைய ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்தது பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும் செந்தில் பாலாஜிக்கு போட்டியாக விஜயபாஸ்கர் கலமிறங்கி தற்போது மாற்றுக் கட்சியினரை அதிமுகவில் இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது தமிழக அரசியல் களத்தை சூடு பிடிக்க வைத்துள்ளது.