தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு முழுவதும் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளை சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவித்து வருகிறார். அதோடு தமிழ்நாட்டில் அதிக மதிப்பெண்கள் பெரும் மாணவ மாணவிகளுக்கு வைரம் மற்றும் தங்கம் உள்ளிட்ட பரிசுகளையும் வழங்குகிறார். மாற்றுத்திறனாளி மாணவர்களில் சாதித்தவர்களை அழைத்தும் கௌரவிக்கிறார்.
இந்நிலையில் திமுக கட்சியின் மாணவர் அணி செயலாளர் ராஜீவ்காந்தி இதனை தற்போது கடுமையாக விமர்சித்துள்ளார். இது பற்றி நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, பல இயக்கங்கள் போராடிப் பெற்றுத் தந்த கல்வியை நடிகர் விஜய் 5000 ரூபாய் கல்வி உதவித்தொகை எனக்கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொள்வது அறமற்ற செயல். ஹிந்தி திணிப்பை எதிர்த்து போராடி தமிழ் இன்று தனித்து நிற்பதால் நடிகர் விஜய் ஒரு படத்திற்கு 200 கோடி சம்பளம் வாங்குகிறார்.
மேலும் நடிகர் விஜய் ஒருவேளை பீகார் அல்லது உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பிறந்திருந்தால் இன்று தமிழ்நாட்டிற்கு பானி பூரி விற்பனை செய்ய தான் வந்திருப்பார் என்று கூறினார். மேலும் நடிகர் விஜய்யை பானி பூரி விற்பனை செய்ய வந்திருப்பார் என்று ராஜீவ் காந்தி கூறியது தமிழக வெற்றிக் கழகத்தினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
