தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரமாக களப்பணிகளை ஆட்சி வருகிறது. அந்த வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ள நிலையில் திமுக கூட்டணியில் களம் காண்கிறார். அதோடு திமுக கூட்டணியில் அதிக தொகுதிகளை கேட்டு பெற முடிவு செய்துள்ளதாகவும் திருமாவளவன் கூறியுள்ளார்.
இந்நிலையில் திருமாவளவன் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் புதுக்கோட்டை மாவட்ட பொறுப்பாளர்கள் 3 மாவட்ட செயலாளர்களை தவிர்த்து விட்டு ஒருங்கிணைந்த கலந்தாய்வு கூட்டத்தை நடத்துவதாக கேள்விப்பட்டேன். இது கட்சி விதிகளுக்கு முரணானது. மாவட்ட செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகள் மனு கொடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராடும் கட்சி உயிர் போடு இருக்க வேண்டும். தினமும் மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதில் கவனமாக இருக்க வேண்டும். அதன் பிறகு விளிம்பு நிலை மக்களுக்கு பட்டா வழங்குவது போன்ற பிரச்சினைகளில் நாம் தலையிட்டு அவர்களுக்கு அது கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
தொடர்ந்து இப்படி மாவட்ட செயலாளர்கள் மீது புகார் கொடுத்து இந்த பிரச்சனைகளை பெரிதாக்கினால் கட்சி நடத்த முடியாது. மேலும் இப்படி தொடர்ந்து நடந்தால் 144 மாவட்ட செயலாளர்களையும் நீக்கிவிடுவேன் என்று பதிவிட்டுள்ளார்.
