கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் அருகே தாதப்பா (29) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக கந்தம்மா (27) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 10-ம் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இவர்கள் இருவரும் கிருஷ்ணா ஆற்றுக்கு சுற்றி பார்ப்பதற்காக சென்றனர். அங்குள்ள ஆற்று பாலத்திலிருந்து செல்பி எடுக்கலாம் என அவர் தன் கணவனிடம் கூறிய நிலையில் அவரும் ஒப்புக்கொண்டார். முதலில் அந்த பாலத்தின் தடுப்பு சுவரில் இருந்து கந்தம்மா செல்ஃபி எடுத்த நிலையில் பின்னர் தன் கணவனை ஏறி நிற்குமாறு கூறியுள்ளார்.

அதன்படி அவரும் ஏறி நின்ற நிலையில் திடீரென கந்தம்மா தன் கணவனை ஆற்றில் தள்ளிவிட்டார். அவருக்கு நீச்சல் தெரியும் என்பதால் நீச்சல் அடித்து அங்கிருந்த ஒரு பாறையில் தஞ்சம் அடைந்த தோடு காப்பாற்றுபடி சத்தம் போட்டார். அதாவது நீரோட்டம் அதிகமாக இருந்ததால் அவரால் வெளியே வர முடியவில்லை.

அவருடைய சத்தம் கேட்டு வந்த வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கயிறு கட்டி அந்த நபரை மீட்டனர். அவர்களிடம் செல்ஃபி எடுக்கும்போது தன் கணவன் தவறி விழுந்து விட்டதாக கந்தமா கூறிய நிலையில் பின்னர் அவரது கணவன் தன் மனைவியிடம் நீ தான் தள்ளிவிட்டாய் எனக் கூறி தகராறு செய்தார்.

இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்த அந்த பெண் எதற்காக கணவனை ஆற்றில் தள்ளிவிட்டு கொலை செய்ய முயன்றார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

సెల్ఫీ తీసుకుందామని చెప్పి భర్తను నదిలోకి తోసి చంపాలనుకున్న భార్య

నదిలో కొట్టుకుపోతూ రాయి వద్ద చిక్కుకున్న భర్త.. తాడు సహాయంతో కాపాడిన స్థానికులు

కర్ణాటక రాయచూర్‌లో నదిపైన ఉన్న వంతెన వద్ద సెల్ఫీ తీసుకుందామని భర్తను కోరిన భార్య

సెల్ఫీ తీసుకుంటుండగా భర్తను నదిలోకి తోసేసిన భార్య… pic.twitter.com/HBL8IQuTmz

— Telugu Scribe (@TeluguScribe) July 12, 2025