மத்தியப் பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தைச் சேர்ந்த லீலா சாஹு என்பவர், 9 மாத கர்ப்பிணி என்ற நிலையில், தனது கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் நேரிடும் அவலங்களை வெளிக்கொணர்ந்து, சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், “சாலை இல்லாததால் மருத்துவமனை செல்லவே முடியாத நிலை உள்ளது. இது என் உயிருக்கும் சவாலாக இருக்கலாம்” என்று வேதனையுடன் கூறியுள்ளார். கடந்த ஒரு ஆண்டாக கிராமத்திற்கு சாலை அமைக்க வேண்டும் என அடுத்தடுத்த முறையாக கோரிக்கை விடுத்துவந்த லீலா, இப்போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் நேரடியாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சித்தி தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்பி டாக்டர் ராஜேஷ் மிஸ்ரா, “அவர் பிரசவ தேதியை எங்களிடம் சொல்ல வேண்டும். அதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே நாங்கள் அவரை மருத்துவமனையில் சேர்ப்போம்” என பதிலளித்துள்ளார். பொதுப்பணித்துறை அமைச்சர் ராகேஷ் சிங் கூறுகையில், “ஒவ்வொரு கோரிக்கைக்கும் துறையில் ஏற்கெனவே முழுமையான பட்ஜெட் இல்லை. சாலை கட்டும் செயல்முறையில் பல கட்டுப்பாடுகள் உள்ளன” என்றார்.
सीधी जिले में सड़क के लिए सोशल मीडिया पर एक्टिव रहने वाली लीला साहू जी के वायरल वीडियो पर @BJP4India सांसद राजेश मिश्रा की सलाह सुनिए!
‘डिलीवरी की डेट बताओ, हम उठवा लेंगे!’
गर्भवती महिला के लिए बेशर्मी से भरा,
यह बयान भाजपा का संस्कार है!@narendramodi pic.twitter.com/2A8r5YlOHj— Jitendra (Jitu) Patwari (@jitupatwari) July 12, 2025
“>
இதற்கு பதிலளித்த லீலா சாஹு, “நான் பாஜகவுக்கு வாக்களித்தேன். இரட்டை எஞ்சின் அரசாங்கத்திடம் நம்பிக்கை இருந்தது. ஆனால் நமக்கு கிடைத்தது வாக்குறுதியல்ல, சாக்குப்போக்குதான்” என தெளிவாகக் கூறியுள்ளார். தற்போது இது தொடர்பாக சமூக ஊடகங்களில் பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் ஆவேசமான கருத்துகளை பகிர்ந்து வருவதால், இந்த விவகாரம் மேலும் தீவிரமாகும் வாய்ப்பு உள்ளது.
