பெங்களூருவில் இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் எக்ஸ் வளைதளம் மூலம் காவல் துறையினருக்கு புகார் ஒன்றை அனுப்பியிருந்தார். அந்த புகாரில் தன்னுடைய புகைப்படத்தை ஒருவர் ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்டிருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதன்படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்திய போது ஆபாசமாக வீடியோ வெளியிட்டு வந்த வாலிபரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த குருதீப் சிங் (26) என்பது தெரிய வந்தது. தற்போது கே.ஆர் புரத்தில் தங்கி அங்குள்ள உணவுகத்தில் அவர் வேலை பார்த்து வரும் இவர் பிரிகேட் ரோடு, எம்ஜி ரோடு போன்ற பகுதிகளில் வந்து செல்லும் இளம்பெண்களை புகைப்படம் வீடியோ எடுத்து அதனை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்துள்ளார்.

இதனை அந்த இளம் பெண்களுக்கு தெரியாமலேயே இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருவதை குருதீப் சிங் வழக்கமாக வைத்துள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அதோடு குருதிப் சிங்கின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 10,000 மேற்பட்டோர் பின் தொடர்கிறார்கள். எனவே இளம் பெண்களை புகைப்படம் வீடியோ எடுத்து தனது ஃபாலோவர்ஸ்காக ஆபாசமாக சித்தரித்து பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் குருதீப் சிங்கை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.