தெலுங்கானா மாநிலம் யாதகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் வித்யாசாகர்(42). இவர் கடந்த 7- ஆம் தேதி திருவண்ணாமலைக்கு வந்து 8-ஆம் தேதி அண்ணாமலையார் கோவிலில் இருந்து கிரிவலம் புறப்பட்டார். அவர் மாநகராட்சி மருத்துவமனை அருகே சென்றபோது பைக்கில் வந்த இரண்டு வாலிபர்கள் வித்யாசாகர் மீது மோதியுள்ளனர்.
இதனை வித்யாசாகர் தட்டி கேட்டதால் தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த 2 வாலிபர்களும் வித்யாசாகரின் காலத்தில் கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் ரத்த வெள்ளத்தில் துடி துடித்த வித்யாசாகரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் வித்யாசாகர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் வித்யாசாகர் குகனேஸ்வரன் தமிழரசன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
