இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தந்தை ஒருவர் தனது மூத்த மகளை கண்டித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வந்த அவரது இதயமகள் தனது தந்தைக்கு சேர் ஒன்றை எடுத்து கொண்டு வந்து தனது தந்தையிடம் கொடுத்து அமர வைக்கிறார்.

 

அதன் பின் மற்றொரு அறைக்கு சென்று தனது தந்தைக்கு காபி கொண்டு வருகிறார். அதையும் தனது தந்தையிடம் கொடுத்துவிட்டு மீண்டும் உள்ளே சென்று தனது தந்தைக்கு ஸ்நாக்ஸ் எடுத்து வந்து கொடுத்துவிட்டு தனது சகோதரியை அங்கிருந்து அழைத்துச் செல்கிறார். அப்போது இறுதியில் அந்த குழந்தை தனது தந்தைக்கு பாய் என்று கூறுகிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.