
உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் 2025 ஆம் ஆண்டுக்கான ஆண்டு “ஆம் விழா” பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவின் போது பல வகையான மாம்பழங்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது. இலவசமாக பொதுமக்களுக்கு மாம்பழங்கள் வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்ததால் அதிக எண்ணையில எண்ணிக்கையிலான மக்கள் வருகை புரிந்திருந்தனர்.
ஆனால் விழாவிற்கு வந்தவர்களின் எண்ணிக்கையை விட மாம்பழங்களின் அளவு குறைவாக இருந்தது. இந்நிலையில் சிலர் கட்டுப்பாட்டை இழந்து தான் கொண்டு வந்த பைகளில் அதிகமான மாம்பழங்களை எடுத்துச் சென்றால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. இது குறித்து விழா நிர்வாகம் மக்கள் வருகைக்கு ஏற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாததால் பொதுமக்கள் இவ்வாறு செயல்பட்டதாக கூறப்படுகிறது.
लखनऊ के आम महोत्सव से आम लूटते हुए विश्व के चौथी सबसे बड़ी अर्थव्यवस्था के लोग
आप इन्हें कपड़ों से पहचानो🤷pic.twitter.com/KPVkgMIVWw
— VIKRAM (@Gobhiji3) July 6, 2025
இலவசமாக மாம்பழங்கள் தரப்படுவதாக கூறி கூட்டத்தை இழுத்து பின்னர் பரபரப்பை சமாளிக்க முடியாமல் போனது நிர்வாகத்தின் பெரும் தவறு என்றும், இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் இது போன்ற விழாக்கள் நடத்தும் போது கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதியாக இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.