
சீன பாரம்பரிய மருத்துவத்தில் இடம் பெற்றுள்ள ‘சிகாங்’ எனும் பயிற்சி தற்போது உலகம் முழுவதும் பரவலாக பேசப்படுகிறது. இதன் மூலம் உடலின் எல்லா பகுதிகளும் மெதுவாக இயக்கப்படுவதால், மன அமைதி, உடல் சமநிலை, நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை அதிகரிக்கின்றன. இது மெதுவான சுவாச முறைகள், மென்மையான அசைவுகள் மற்றும் தியானம் ஆகியவற்றை ஒருங்கிணைத்த உடற்பயிற்சி முறையாகும்.
View this post on Instagram
இந்த பயிற்சி பற்றிய வீடியோவை, இன்ஸ்டாகிராமில் ஒரு சிகாங் பயிற்சி ஆசிரியர் பகிர்ந்துள்ளார். அதில், “நானும் பல ஆசியா பெண்களும் இந்த பயிற்சியை தினமும் செய்வது காரணம் இதுதான். இது என் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. அதற்காக ஜிம்முக்கும் செல்லவில்லை. தினமும் 5 முதல் 15 நிமிடங்கள் இதை செய்தால் போதும்,” என கூறியுள்ளார். வீடியோவில் அவர், கைகளை முன்னும் பின்னுமாக சுழற்றுவது, இடுப்பை வளைத்து கைகளை பின்னால் குத்துவது போன்ற எளிய அசைவுகளை செய்துள்ளார்.
இந்த பயிற்சியின் நன்மைகள் குறித்து க்ளீவ்லேண்ட் கிளினிக் வெளியிட்ட அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. “இது ஒரு மருத்துவ மாற்று அல்ல, ஆனால் மனதை அமைதிப்படுத்தவும், உடலை நன்றாக உணரவும் இது பயனுள்ளதாக இருக்கிறது” என மருத்துவ நிபுணர் கூறியுள்ளார். வயதானவர்களும், உடல் நிலை குறைவுள்ளவர்களும் கூட இந்த பயிற்சியை எளிதாக செய்துவிடலாம் என்பதாலேயே இது தற்போது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.