ஈரோட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டு சிறுமியை காதலிப்பதாக கூறி ஜவுளிக்கடை ஊழியர் பாட்ஷா அவரை கடத்திச் சென்று பள்ளி பாளையத்தில் வைத்து திருமணம் செய்துள்ளார். அதன்பின் உடல்நல பாதிப்பால் சிறுமி மருத்துவமனைக்கு சென்ற போது அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக குழந்தைகள் நல அலுவலர் அளித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ வழக்கில் பாட்ஷாவை கைது செய்தனர். இதையடுத்து காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
