திருநெல்வேலி மாவட்டத்தில் உப்பூர் ஊர்க்காடு சுடலைமாட சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் சாமக்கொடை விழா கடந்த 6-ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில் சுடுகாட்டிற்கு வேட்டைக்கு சென்ற திரும்பிய சாமி ஆடியவர்களின் தோளில் எரிந்த நிலையில் மனித தலை, கை கால்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பக்தர்கள் சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் வெளியிட்டனர்.
இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கிராம நிர்வாக அலுவலர் மனித தலையுடன் சாமி ஆடியவர்களின் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் ஐந்து பேர் மீது போலீசார் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
