“த.வெ.க ஆட்சிக்கு எதிராக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்திருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் த.வெ.க அரசின் அமைச்சர் ராஜ்மோகன் கடுமையான கண்டனங்களை முன்வைத்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘கூட்டணிக் கட்சிகளுக்கான உரிய அங்கீகாரத்தையும் மதிப்பையும் முழுமையாக வழங்கியவர் முதலமைச்சர் விஜய் தான்; அப்படியிருக்க, இன்னும் 3 மாதங்களில் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று மு.க.ஸ்டாலின் பேசியிருக்கவே கூடாது’ என்று ஆவேசமாகக் குறிப்பிட்டார்.

மேலும், மு.க.ஸ்டாலின் ஒரு மூத்த அரசியல்வாதி என்றும், அப்படிப்பட்ட அனுபவமிக்க ஒருவர் பொதுவெளியில் இத்தகைய தரம் தாழ்ந்த கருத்தைக் கூறியிருக்கக் கூடாது என்றும் சாடினார்.

தொடர்ந்து தி.மு.க-வின் கடந்த கால அரசியல் நகர்வுகளை விமர்சித்த அமைச்சர் ராஜ்மோகன், கூட்டணி என்கிற பெயரில் தங்களோடு இருக்கும் கூட்டணிக் கட்சிகளின் முதுகில் ஏறிச் சவாரி செய்து அரசியல் ஆதாயம் தேடுவதுதான் தி.மு.க-வின் வழக்கம் என்று அதிரடியாகக் குற்றம்சாட்டினார்.