
மணிரத்தினம் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் தக் லைஃப் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் சிம்பு, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, கௌதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்தது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தக் லைப் திரைப்படம் ரிலீஸ் ஆனது.
View this post on Instagram
இந்நிலையில் நடிகை குஷ்பூ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, மணிரத்தினம் சார் படத்தில் என் மகளின் பெயரும் வந்ததை பார்த்து ஒரு பெற்றோராக நான் பெருமிதம் அடைகிறேன்.
மகளுக்கு முழங்காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக அவரால் சிறிது நாட்கள் தான் அந்த படத்தில் பணியாற்ற முடிந்தது. அப்போதே என் மகள் நிறைய விஷயங்களையும், தொழில் நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டார்.
அது என் மகளின் மனதில் வாழ்நாள் முழுக்க நிலைத்திருக்கும். அந்த அனுபவம் உண்மையிலேயே அற்புதமானது. சிறிது காலம் வேலை பார்த்தாலும் என் மகளின் பெயரை மறக்காமல் இடம்பெற செய்தமைக்கு நன்றி மணி சார் என பதிவிட்டுள்ளார்.