சென்னையில் இருந்து புறப்பட்ட ஆம்னி பேருந்து ஒன்று  பொள்ளாச்சி நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. அப்போது அந்த பேருந்து விருதாச்சலம் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது லாரி ஒன்று முன்னாள் சென்றது. இந்நிலையில் திடீரென பேருந்து  டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பேருந்து முன்னாள் சென்ற லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் எதிர்பாராத விதமாக 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து காரணமாக பாலத்தின் மேல் வாகன போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டது. இதன் காரணமாக சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் மெதுவாக வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.