கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே 11-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முன்னாள் அரசு பள்ளி தற்காலிக ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆதிவராகநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ராமன் சில காலம் அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி உள்ளார். தற்போது அவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்க்கிறார்.

இந்த நிலையில் தான் வேலை பார்த்த பள்ளியில் படித்த 11- ஆம் வகுப்பு மாணவிக்கு ராமன் செல்போன் பரிசாக வாங்கி கொடுத்து தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவி தனது வீட்டிலிருந்த டீசலை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ராமனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.